சினிமா பிரதான செய்திகள்

நல்லதொரு நட்சத்திர பாடகரை தேடும் ஏ.ஆர்.ரகுமான்


முன்னணி இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், புதிய பாடகரை தேடி வருகிறார். ஒஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சினிமாவுக்கு இசையமைப்பதையும் தாண்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் இசைப்பாடசாலை ஒன்றையும் நடத்தி வருகிறார். இசை மற்றும் பாடுவதில் ஆர்வமுடையவர்களுக்கு வாய்ப்பளித்து வரும் அவர் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உங்களிடம் இசைக்கான பேரார்வம் உள்ளதா? அப்படியானால், நீங்கள் மேடை ஏற, இதுவே சரியான தருணம். நான் நல்லதொரு நட்சத்திர பாடகரை தேடிக் கொண்டிருக்கிறேன்; அது நீங்கள் என்றால், உங்கள் விவரங்களை இங்கே தெரிவிக்கவும்’ என அதற்கான வழிகளை பதிவிட்டுள்ளார்.

யூரியூப்புடன் இணைந்து இத்தகைய முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். தங்களுக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாக எண்ணி பலரும், தங்கள் தகவல்களை இதில் பதிவிட்டு வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap