இலங்கை பிரதான செய்திகள்

பெரிய குளம், சிறிய குளத்தை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை துரிதம்..

ஊடகச் செய்தியின உடனடி பலன்….

யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவிற்குட்பட்ட குளத்தடி பள்ளிவாசல் அருகே காணப்படும் பெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த இவ்விரு குளங்களும் தூர்வையற்று காணப்படுவதாக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் ஆராயும் முகமாக இன்று(16) மாலை அப்பகுதிக்கு சென்ற யாழ் மாநகர சபையின் பதில் முதல்வர் துரைராசா ஈசன் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாமுடன் இணைந்து பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் பதில் முதல்வர் இவ்விரு குளங்களையும் துப்பரவு செய்து மக்கள் பாவனைக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதுதவிர மாநகர சபை எல்லைக்குட்பட்ட 30க்கும் அதிகமான கால்வாய்கள் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக நீரேந்து பகுதிகளை கவனிக்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேற்குறித்த குளங்கள் 1990 ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இக்குளங்களை தமது அத்தியவசியத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த நிலையில் போர்ச்சூழல் காரணமாக உரிய பராமரிப்பின்றி அழிவடைந்து காணப்பட்டதுடன் குறிப்பாக அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு முக்கியமாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளதுடன் இந்த குளங்களை மீளவும் துப்பரவு செய்து சீராக்கி தருமாறு தகுதி வாய்ந்த அதிகாரிகளை கேட்டிருந்தனர்.

இக்குளத்தின் அருகே ஜனாசா நல்லடக்கம் செய்யும் இடம் காணப்படுவதனாலும் நல்லடக்கத்தில் கலந்து கொள்பவர்கள் குளிப்பதற்கும் பெரிதும் உதவும் எனவும்தற்போதைய அரசாங்கத்தில் 1000 குளங்கள் அபிவிருத்தி என்ற திட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இக்குளத்தினையும் துப்பரவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

பாறுக் ஷிஹான்…..

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers