குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்று காலை கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதிக்கு முன் உள்ள பண்ணை ஒன்றிற்கு அருகில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர் இதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகிறது
முறுகண்டிப் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று திடீர் என குறுக்கே வந்;த மாடு ஒன்றுடன் மோதுண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கண்டர் வாகனம் ஆகியவற்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுகாயங்களுக்கு உள்ளானவர்களில் மோட்டார் சைக்கிள் சாரதியின் நிலமையே கவலைகிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment