இந்தியா பிரதான செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கான வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு :

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி   கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.  குறித்த 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள போதும் இதுதொடர்பில் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இதற்கிடையே, 7 பேர் விடுதலை தொடர்பாக 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் , மனுதாரர்கள் சார்பில் முன்னிலையாகவேண்டிய வழக்கறிஞர்கள் முன்னிலையாததன் காரணமாக விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.