வெலிக்கடை சிறைச்சாலைத் தாக்குதல் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் காவல்துறை போதை ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகிய இருவரையும் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, 27 கைதிகள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
Spread the love
Add Comment