இலங்கை பிரதான செய்திகள்

விஜயகலா மகேஸ்வரனுக்கெதிராக வழக்கு தொடர சட்டமா அதிபர் நடவடிக்கை :


முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கெதிராக வழக்கு தொடர சட்டமா அதிபர் நடவடிக்கையெடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீள் உருவாக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சபாநாயகரான நீங்கள் இந்த சபையில் தெரிவித்திருந்தீர்கள்.

அதன்படி சட்ட மா அதிபரினால் அது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதா , வழங்கப்பட்டிருந்தால் அதனை எப்போது பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றீர்கள் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த போதே சபாநாயகர் சட்டமா அதிபர் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link