இலங்கை பிரதான செய்திகள்

கைதடியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கியதில் ஐவர் படுகாயம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ். தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என காவல்துiயினர் தெரிவித்துள்ளனர்.

‘கைதடி ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும் கூரிய ஆயுதங்களால் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர் எனவும் அவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்தனர் எனவும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக
ஆரம்ப விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.