Home சினிமா எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனை

எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனை

by admin

மெர்சல் திரைப்படம் புதிய மைல்கல்லை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான மெர்சல் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது.

விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் எஸ்.ஜே.சூர்யா , சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.  விவேக் வரிகளில் இடம்பெற்ற ஹஆளப்போறான் தமிழன் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது.

மேலும் உலக அளவிலும் மெர்சல் படத்துக்கு கவனம் கிடைத்துள்ளதுடன் சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கு கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனைப் படைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More