உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவுக்கு ரஸ்யா எச்சரிக்கை

US versus Russia

தடைகளை தொடர்ந்து விதித்துவரும் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஸ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு நேற்று பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக, ரஸ்யாவைச் சேர்ந்த 33 உளவு நிறுவனங்கள் மற்றும் ராணுவத்துடன் தொடர்புடையை தனியார் நிறுவனங்கள் இந்த தடை வளையத்துக்குள் வந்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக் ரஸ்ய வெளியுறத்துறை அமைச்சர் செர்கேய் ரியாப்க்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா விதித்து

வரும் தடைகளால் ரஸ்யா வின் நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவை மீது மீண்டும் தடை விதிப்பது வேடிக்கையாக உள்ளது. அமெரிக்காவில் இருப்பவர்கள் பொழுதுப்போக்குக்காக இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அர்த்தமற்ற செயல்களால் ரஸ்யா -அமெரிக்கா இடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதுடன், சர்வதேச அரசியலில் பதற்றமும் உருவாகும் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அபாயகரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் செர்கேய் ரியாப்க்கோவ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.