கடந்த ஓரு வருடத்துக்கும் மேலாக, சில பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் மூன்றாம் தரப்பினருக்கு கசிந்திருக்கலாம் என ருவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ட கோளாறு ஏற்பட்ட இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ருவிட்டரினுள் நுழைந்தவுடன் குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையானது 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீடித்து வருவதாக தெரிவித்துள்ள ருவிட்டர் நிறுவனம் இந்தத் தவறினால் எத்தனைபேர் பாதிப்பட்டனர் என்ற தகவலை வெளியிடாதநிலையில் மொத்த பயன்பாட்டாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானோருக்கு மட்டுமே இது பிரச்சனையாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது
Add Comment