இலங்கை பிரதான செய்திகள்

எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் காலஅவகாசம்

மாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையிலான குழு மேலும் 2 மாத கால அவகாசம் கோரியுள்ளது. நேற்றையதினம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெற்ற விசேட கட்சி தலைவர்களின்  கூட்டத்தின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவை உள்ளமையினாலேயே இவ்வாறு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீளாய்வு குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவையென்றால் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap