இலங்கை பிரதான செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் கிளிநொச்சி அலுவலகம் அங்குரார்ப்பணம் ..

வலிந்து காணாமலாக்கப் பட்டோரின் உறவுகளினால் மேற்கொள்ளப் பட்டு வரும் காலவரையற்ற போராட்டம் இன்று  22.09.2018  580 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. ஆயினும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் வளாகத்தில் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள வியாபார நிலையத்தில் அலுவலகம் அமைக்கப் பட்டு இவ் புதிய இடத்திற்கு போராட்டக் களம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது .

இது குறித்து பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் . எமது போராட்டம் ஆரம்பிக்கப் பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் பல்வேறு இன்னல்களுடன் ஆலய வளாகத்தில் செயற்பட்டு வந்தோம். வெய்யில் , மழை , பனி மட்டுமன்றி யு 9 தெருவில் போய் வரும் வாகனங்களின் இரைச்சல், தூசிகளும் , புழுதிகளும் , புகைகளும் , பல்வேறு சத்தங்களும் எமது உடல்நிலையையும் பாதிப்படையச் செய்கின்றது. எமது பிள்ளைகளை தேடி அலைவது மட்டுமன்றி எமது உடல்நிலையும் பாதிக்கப் பட்டு வருகின்றது . போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பயநின்றி கிளிநொச்சியில் மட்டும் 6 பேருக்கு மேல் மரணமாகி உள்ளனர். அதனால் பாதுகாப்பான சூழல் தேடி வியாபாரக் கட்டடத்தினை அலுவலக ஒழுங்கமைப்புடன் போராட்டக் களமாக மாற்றியுள்ளோம் .வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின்  கிளிநொச்சி அலுவலகம் எனப் பெயரிடப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் A9 வீதியில் உள்ளது. ஊடகங்களின் ஊடாக இதனை இப்போது தான் தெரியப்படுத்துகின்றோம் எனவே எம்மைச் சந்திக்க வரும் அனைவரும் கந்தசாமி ஆலய வளாகம் செல்லாமல் புதிய இடத்தில் சந்திக்க முடியும் .மேலும் இதுவரை பதிவு செய்யாத பலரும் இப்போது எம்முடன் இணைந்து கொள்ளும் வகையில் பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் . பதிவு செய்யப்பட் ட அனைவரும் சுழற்சி முறையில் போராட்டத்தில் பங்கு பற்றி வருகின்றனர் என்றார். அதே வேளை அவர்கள் அந்த கட்டடத்தினுள்ளேயே உணவுகளை சமைத்து உண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers