சினிமா பிரதான செய்திகள்

புதிய படத்திற்காக தோற்றத்தை மாற்றிய அதர்வா


`இமைக்கா நொடிகள்’ படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்’ படத்திற்காக நடிகர் அதர்வா மொட்டையடித்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.  இயக்குனர் கண்ணனின் இயக்கத்தில் அதர்வா – மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் `பூமராங்’ திரைப்படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகர் அதர்வா மொட்டை அடித்துக் கொண்டு நடித்துள்ளார்.

அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா விரைவில் அறியும் என்றும் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர் என்றும் படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் தீவிரத்துடன் அவர் ஒன்றித்துவிட்டார் என்றும் கூறுகிறார் இயக்குனர் கண்ணன்.

மொட்டை அடித்ததால், முடி வளர இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் இப் படத்துக்காக அவர் அந்த தியாகத்தை செய்ய வேண்டியிருந்ததாகவும்  இமைக்கா நொடிகள் போலவே இந்த படத்துக்காகவும் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என்பது உறுதி என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். மசாலா பிக்ஸ் இப் படத்தை தயகாரிக்கின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers