தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக ரோகநாத் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக இசைக் கருவிகளை கற்றுவருவதாக படத்தின் இயக்குனர் ரோகநாத் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரோகநாத் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து இயக்குனரிடம் கேட்டபோது,
“நான் இந்தக் கதையின் ஒன்லைனை ஜனநாதன் சாரிடம் சொன்னேன். அவர்தான் விஜய் சேதுபதியிடம் சொல்லிப்பார் என்றார். அவரிடமும் ஒன் லைன் சொல்ல அவருக்கும் பிடித்திருந்தது. பிறகு படத்தின் மொத்தக் கதையையும் எழுதி முடித்துவிட்டு அவரிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிட்டார். இசையைப் பற்றியும் சர்வதேச அளவில் நடந்துவரும் ஒரு பிரச்னை குறித்தும் பேச இருக்கிறேன். இதில் இசைக் கலைஞராக விஜய்சேதுபதி நடிச்சிருக்கார். அதற்காக, பியானோ, கிட்டார் என கற்று வருகிறார்.வெளிநாட்டு பெண் ஒருவர் அவருடன் நடிக்கிறார். கதாநாயகி பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்“
என்றார்.
இதேவேளை சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதியின் விவசாயி தோற்றம் என்றுகூறி புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாகவும் அது விஜய் சேதுபதி அல்ல என்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என்றும் தெரிய வந்துள்ளது.
Add Comment