இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு2 – கருணாசுக்கு ஒக்டோபர் 5-ம் திகதி வரை விளக்கமறியல்

தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்ட கருணாஸை ஒக்டோபர் 5-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது…

Sep 23, 2018 @ 02:02

தமிழக் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் திகதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசியபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார்.

மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்து வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்து தெரிவித்த அவர் சாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பேசியிருந்த நிலையில் அது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து, முதலமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் காவற்துறையினர் யூ டியூப்பில் வெளியான காணொளியை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில், கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவற்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கருணாஸ் இன்னும் வீட்டை விட்டு வெளியே அழைத்து வரப்படவில்லை. அவரது வீடு முன்பு 2 காவல் ஆணையர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers