சினிமா பிரதான செய்திகள்

சிறந்த நடிகராக விஜய் தேர்வு


நடிகர் விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான மெர்சல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.

விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்ததுடன்   நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

மெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்காக நடிகர் விஜய்யின்; பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டு அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அறிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers