பிரதான செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ணம் – சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை 3 ஓட்டங்களால் பங்களாதேஸ் வென்றுள்ளது.


அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 3 ஓட்ட வித்தியாசத்தில் பங்களாதேஸ் அணி வென்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தி நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அல்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜிபுர் நயீப், குல்புதின் நயீப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து 251 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய ஆபகானிஸ்தான் அணி 248 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பங்களாதேஸ் அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. பங்களாதேஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முஸ்தாபிசுர் ரகுமான் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link