உலகம் பிரதான செய்திகள்

டெக்சாஸில் சிறைச்சாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட வாழைப்பழப் பெட்டிகளில் 18லட்சம் டொலர்கள் பெறுமதியான போதைப்பொருள் :

டெக்சாஸில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள வாழைப்பழப் பெட்களில் இருந்து 18 லட்சம் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்த வாழைப்பழங்களை சிறைக்காவலர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது வாழைப்பழங்களுக்கு கீழே வெள்ளை நிற பொடி போன்ற பொட்டலங்களை காணப்பட்டதனையடுத்து சுங்கவரித்துறை அதிகாரிகள் அனைத்து பெட்டிகளையும் சோதனை நடத்தினர். இதன் போது, சுமார் 45 பெட்டிகளில் இருந்து 540 கொகைன் எனும் போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் மதிப்பு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கலாம் என தெரிவித்துளடள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.