பிரதான செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ணம் – பாகிஸ்தானை வென்று பங்களாதேஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்


அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் சூப்பர் 4 பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் 37 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று பங்களாதேஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் 48.5 ஓவரில் 239 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்;களையும் இழந்திரு;தது.

இதையடுத்து, 240 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியடைந்து ஆசிய கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்களாதேஸ் அணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.