Home இந்தியா உலக கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், இந்திய பல்கலைக்கழகங்கள் 200க்கு அப்பால்….

உலக கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், இந்திய பல்கலைக்கழகங்கள் 200க்கு அப்பால்….

by admin

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ‘ரைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலிலேயே இவ்வாறு முதல் 200 இடங்களில், எந்த இந்திய பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை.

இந்தநிலையில் இந்தியாவில் கல்வித்துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் முதல் இரண்டு இடங்களையும், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.  ஆசிய நாடுகளில் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 22-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களில், இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) 251-க்கும், 300-க்கும் இடையிலான இடத்தை பிடித்துள்ளது. முதல் 200 இடங்களுக்குள் எந்த இடத்தையும் பிடிக்காவிட்டாலும், 1,000 வரையிலான பட்டியலில், 49 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டை விட 7 இடங்கள் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More