சினிமா பிரதான செய்திகள்

விஷால் மற்றும் தனுஷுடன் தனது படத்தையும் இறக்கும் விவேக்


நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ திரைப்படம் விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘வட சென்னை’ திரைப்படத்துடன் ஒரே நேரத்தில் திரைக்கு வருகின்றது.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.

முன்னதாக வருகிற ஒக்டோபர் 5-ஆம் திகதி   வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி வருகிற ஒக்டோபர் 18ஆம் திகதி விடுமுறை தினத்தில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதே நாளில் தனுஷ் நடித்திருக்கும் “வடசென்னை” திரைப்படமும், விஷால் நடித்துள்ள “சண்டக்கோழி 2” திரைப்படமும் வெளியாக இருக்கின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers