இலங்கை பிரதான செய்திகள்

யாழ் உரும்பிராய் பகுதியில் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்…

யாழ் உரும்பிராய் பகுதியில் அருகருகே அமைந்துள்ள இரு வீடுகள் மீது இனம்தெரியாத கும்பல் சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீ:கள் மீது இவ்வாறு மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இதனால் இரண்டு வீடுகளினது முன்பக்கம் கடும் சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் கோப்பாய்ப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.