பிரதான செய்திகள் விளையாட்டு

சிம்பாப்வேக்கு எதிரான 1வது ஒருநாள் போட்டி – தென்னாபிரிக்கா 5 விக்கெட்டுக்களால் வெற்றி :

சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  சிம்பாப்வே அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில், கிம்பர்லியில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணியும், தென்னாபிரிக்கா அணியும் போட்டியிட்டன.  நாணயச்சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 34.1 ஓவரில் 117 ஓட்டங்களை மாத்தரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து 118 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 26.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக லுங்கி நெகிடி தேர்வு செய்யப்பட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap