இந்தியா பிரதான செய்திகள்

இந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து


இந்தியா முழுவதிலும் தமிழகத்தில் மூன்று இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தம் இன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

கேள்விமனு கோரப்பட்டதில் வேதாந்தா நிறுவனத்துக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளதாகவும் தமிழகத்தில் இரண்டு இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு இடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்கும் அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில், காவரி கடைமடை பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.