Home பிரதான செய்திகள் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ரொனால்டோ :

தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ரொனால்டோ :

by admin


தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு  பிரபல கால்பந்தாட்ட வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான கத்ரின் மயோர்கா (Kathryn Mayorga )  என்ற பெண் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்

எனினும் இந்த முறைப்பாட்டினை மறுத்த ரொனால்டோ , கத்ரின் மயோர்கா தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் மோசடி எனவும் உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற முறைப்பாடுகளில் சிக்கவைக்கப்பட்டதாகவும் ; அவை யாவும் உண்மை இல்லை என்பதனை காலம் நிரூபித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More