Home இலங்கை கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்ட வேண்டாம் – 4வது நாளாக போராட்டம்

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்ட வேண்டாம் – 4வது நாளாக போராட்டம்

by admin


கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம்- கொழும்பு முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம், இன்று செவ்வாயக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள்,மத தலைவர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு குப்பை புத்தளத்துக்கு வேண்டாம், குப்பைகளால் சூழலை மாசுபடுத்தாதே, உயிர் கொல்லும் கொடிய நோய்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் சேர்க்கப்படும் குப்பைகள் புத்தளம்- அறுவக்காடு குப்பை சேகரிப்பு மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை நேற்று 1ம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar October 2, 2018 - 6:57 pm

Then where have been those garbage to be dumbed????? over in Sri Lanka soil. Then shall we export it???? or just dumped over those sea of Sri Lankan waters????? Then problem ya. Though sea fish would grow over those bio garbages ha ha ha…

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More