உலகம் பிரதான செய்திகள்

ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலே தெரிவு செய்யப்பட்டார்…

ஈராக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அமைச்சராக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர். ஈராக்கில் சதாம் குசைனின் வீழ்ச்சிக்கு பின் அங்கு ஜனநாயக ஆட்சி ஏற்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்திருந்தனர். இதன்போது பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பர் மாதமளவில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஈராக்கில் கடந்த ஜூலை 12-ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் மதகுரு மக்தாதா தலைமையிலான சயிரூன் கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

மேலும் வாக்குகளை இயந்திரங்கள் மூலம் எண்ணப்படாமல் நேரடியாக கைகளால் எண்ணும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதனையடுத்து, வாக்குகள் அனைத்தையும் கைகளால் எண்ண வேண்டும் என பாராளுமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து ஜனாதிபதித் தேர்தலில் நடத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணி வெற்றி பெற்றநிலையில், ஈராக்கின் புதிய ஜனாதிபதிரைய தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.
. இதில் குர்தீஷ் இனத்தைச் சேர்ந்த குர்தீஷ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சலேவும், குர்தீஷ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.