இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

தலவாக்கலையில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததனால் 300 குடும்பங்கள் இடப்பெயர்வு


தலவாக்கலை காவல்துறைப் பிரிவுகுட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவில் நேற்று மாலை பெய்த கன மழையினால் கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சுமார் 2000 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக மலைப்பகுதியின் அடிவாரத்தில் வசித்த சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமாக தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், பாடசாலை ஒன்றிலும் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 13 தடவைகள் குறித்த மலையிலிருந்து மண்மேடுகள் சரியும் பாரிய சத்தம் கேட்டதாலேயே மக்கள் அச்சமடைந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link