இலங்கை பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விஜயராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் தங்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர வேறு எதனையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால மீதான கொலை சதி முயற்சி குறித்து ஜனபரிபதிக்கே பல விடயங்கள் தெரிந்திருக்கும் எனவும் குறிப்பி;ட்டுள்ளார்

குறித்த சந்திப்பில் காவல்துறைமா அதிபர் விவகாரம்,ஜனாதிபதி கொலை சதி குறித்து அரசாங்கம் மௌனத்தை கடைப்பிடிப்பது போன்ற விடயங்கள் குறித்து கலந்துiயாடப்பட்டதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.