இலங்கை பிரதான செய்திகள்

கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும்!

திருமலை ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள்…

கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். நியூசிலாந்துக்குச் சென்றுள்ள திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகாரை குளோபல் தமிழ் செய்திகளின் பத்தியாளர் வரதராஜன் மரியம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட திருகோணமலையின் மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய ” இராவணதேசம்” நூல் வெளியீட்டு நிகழ்விலே திருமலையின் புதிய ஆயர் பேசிய விடயங்களை தனது கலந்துரையாடலில் நினைவுபடுத்தியுள்ளார் பத்தியாளர்.

இன்று கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும். அதுவரை ஏதோ வருகிறது; வந்துவிட்டது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிராதீர்கள்! தமிழ் தலைமையை நோக்கி கூறியிருந்தார் ஆயர். சிவ பக்தனான இராவணனின் பூமி பற்றி ஆயர் மிகவும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

புத்தக வெளியீட்டில், ஆயராக வந்தவர், வெறும் ஆசியுரை தான் வழங்குவார் என எதிர்பார்த்தவர்கள், கத்தோலிக்க ஆயர் தேவாரம் பாடப்பெற்ற இந்து ஆலயம் பற்றி ஆதங்கத்துடன் அங்கு பேசுவார் என்றும் எதிர்பார்க்கவில்லை. இது சர்ச்சைக்குரிய உரையாக அமைந்ததாக மட்டக்களப்பு ஊடவியலாளர் உதயகுமாரும் குறிப்பிட்டதாக வரதராஜன் குறிப்பிடுகிறார்.

அண்மையில் நியூசிலாந்து சென்றிருந்த ஆயருடன் மேற்குறித்த உரை பற்றிக் கேட்டபோது , ” நான் பிறந்த காலம் முதல் தட்டி விழுந்து ஓடித் திரிந்த மண் அது . கிண்ணியாவில் தமிழ் தவழ்ந்தது. இன்று போய்ப்பாருங்கள். நான் புதிதாய் ஒன்றும் சொல்லவில்லை. நடப்பதைத்தான் அங்கு சொன்னேன்” என்று ஆயர் பதில் அளித்துள்ளார்.

ஆயருடன் கலந்துரையாடிய சில விடயங்களை பின்வருமாறு குறிப்பிடுகிறார் வரதராஜன்.

நம்மவர்கள் சொல்கிறார்கள் ” எல்லாம் நிறைய இருக்கிறது ” ..என்று. ஆனால் நம்மைச் சந்திக்கும் வெளிநாட்டவர்கள் , “இதுவே கடைசிச் சந்தர்ப்பம்…… நிறைவாய்க் கேளுங்கள்..உங்கள் பக்கம் தான் கேட்கவேண்டும்..” என்று சொல்கிறார்கள்.

திருமலை மாவட்டத்திலிருந்து அகதிகளாகச் சென்ற பல குடும்பங்கள் தங்கள் காணி பூமிகளை விட்டுவிட்டு இன்றும் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். பலருக்கு இது இன்னமும் தெரியாது. அவர்களை, அவர்களில் இயன்றவர்களை மீளவும் திருமலை மாவட்டத்திலேயே குடியேற்ற புலத்திலுள்ள வசதியானவர்கள் முன்வரவேண்டும். அவர்கள் கட்டாயம் செய்யவேண்டிய சமூகக் காரியமாக அது அமையும்.

மட்டுநகர் – திருமலை மறை மாவட்டத்திலிருந்து திருமலை பிரிக்கப்பட்ட பின்னர் 15 கத்தோலிக்கப் பங்குகளை நான் நிருவகிக்கவேண்டியுள்ளது. அதில் 4 பங்குகள் ( Parishes) தன்னிறைவானவை. 11 பங்குகளை பராமரிக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. யாழ், மன்னார், மட்டக்களப்பு போன்ற வருமானமும் வசதியும் கொண்ட மறைமாவட்டம் அல்ல எனது மறைமாவட்டம். இதைவிட வறிய மாணவர்கள் , போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எனப் பலரையும் பராமரிக்கும் பாரிய பணியும் எமது நிருவாகப் பொறுப்பாக உள்ளது.
புலத்திலுள்ள கத்தோலிக்கர்கள் உதவலாம்.

ஒரு பங்கை வசதியுள்ளவர்கள் தத்தாகவும் குறித்த காலத்துக்கு ( 1 .2 வருடங்களுக்கு) எடுக்கலாம். இது எனது கோரிக்கை அல்ல. ஆலோசனை மட்டுமே ! ” இவ்வாறு திருமலையின் புதிய ஆயர் இம்மானுவேல் கூறியதாக குறிப்பிடும் வரதராஜன் ஆயர் சொன்னவற்றிலுள்ள அர்த்தங்களைப் புரியக் வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • It’s bit thoughtful plea by the bishop of Trincomalee. I welcome your speech Arch bishop of Trincomalee. Though in fact while look into Sri Lankan catholics that have been in two splits that one tamil catholics and other Sinhalese catholic have divergent stands, even recently there had been a controversial speech by one of the Bishop of southern part point out fingers towards those international community that they have now took such weapon over Sri Lanka by human rights abusers. In fact that undeniably true context that no one can deny by that had been or even now sporadically that has been happening in our land of Sri Lanka by those faction by militon mafia operatives as well those state forces from the past. That no one can hide or deny with provided the strong evidence. There some more to other that has to accepted and confidence building based on those gaps in conciliatory manner rather alleging each other. This is my humble plea. May God bless mother Sri Lanka.

Share via
Copy link
Powered by Social Snap