Home இலங்கை கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…

கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…

by admin


கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின், ஐக்கிய இராச்சியப் பிரதிநிதி சுரேஷ் செல்வரட்ணம், கடந்த 25.09.2018 அன்று, FEED அமைப்பினால் அனுசரணை வழங்கப்பட்டு வரும், மூதூர் பிரதேசத்தின் கூனித்தீவு கலைவாணி முன்பள்ளிக்கும் சூடைக்குடா குன்றத்தூரான் முன்பள்ளிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன் போது FEED அமைப்பின் செயலாளர் ஐ. யசோதரனும் இணைந்திருந்தார்.

பாடசாலைகளின் தற்போதைய நிலைமை, மாணவர்களின் சுகாதார நிலைமை, பௌதீக வளங்களில் உள்ள குறைபாடுகள், மேலதிக தேவைகள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இவ்விரு பாடசாலைகளின் அனைத்து விடயங்களினதும் மேம்பாட்டிற்கு, சுரேஷ் செல்வரட்ணம் தொடர்ச்சியாக நிதியுதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More