இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி முன்னிலையில் சாள்ஸ்

 
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  கோரிக்கை விடுத்துள்ளார்.
  ‘வனரோபா’ தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  இன்று வெள்ளிக்கிழமை (5) காலை மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,
இலங்கையில் யுத்தம் நடை பெற்றது. அந்த யுத்ததிலே தமிழ் மக்களுக்காக எங்கள் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக ஆயுத போராட்டம் இடம் பெற்றது.  குறித்த ஆயுத போராட்டத்திற்கு உதவி செய்தார்கள் என்ற காரணத்தினால் இலங்கை சிறைகளில் தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக இருக்கின்றனர். அரசியல் கைதிகளாக தற்போது 107 பேர் இருகின்றார்கள். அதில் 52 பேர் தற்போது நீதிமன்ற வழக்குகளில் இருக்கிறார்கள். நீதி மன்றம் தண்டனை அளித்தவர்களாக 55 பேர் இருக்கின்றனர். இவர்கள் தமிழ் மக்களுக்காக அவர்களுடைய உரிமைக்காக, உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையில் தான் ஆயுத போராட்டத்திற்கு ஒரு சில உதவி செய்தனர்.
 அவர்கள் அதற்குறிய வகையில் பத்து வருடத்திற்கு மேல் சிறையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.  அவர்கள் தங்களிடம் கேட்பது ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ தங்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே .    குடும்பங்களோடு  இணையவேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர்கள் தற்போது சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.    எனவே இந் நிகழ்வில் அவர்கள் சார்பாக கேட்டு கொள்வது அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே.
 தற்போது இலங்கையில் வரட்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு குடும்பத்தலைவன் இருந்தால் கூட அந்த குடும்பங்களை கொண்டு செல்வதற்கு எங்களுடைய குடும்பங்கள் மிகவும் கஸ்டப்படுகின்றது.  ஆகவே ஒரு குடும்ப தலைவன் சிறையில் இருக்கும் போது அவனது மனைவி பிள்ளைகள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள்.
அவர்கள் கல்வியில் எவ்வளவு பின்னடைவு ஏற்பட்டு கொண்டு இருகின்றது என்பதை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என மக்கள் சார்பாக கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.
 இது மன்னார் மாவட்ட மக்களின் கோரிக்கை மட்டும் அல்ல இலங்கையில் இருக்கும் ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.  ஒருசில சிங்கள மக்களும் சொல்லுகின்றார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் சொல்லுகின்றார்கள் அவர்கள் நீண்டகாலம் இருந்து விட்டார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று. எனவே ஜனாதிபதி அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் என மேலும் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த கோரிக்கை தொடர்பாக அல்லது  அரசியல் கைதிகள் தொடர்பாகவோ எந்த கருத்தும் தொரிவிக்க வில்லை என்பது குறிப்பிடதக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.