இந்தியா பிரதான செய்திகள்

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி


நேற்றிரவு இடம்பெற்ற அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவுநேரசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  பிருத்வி – 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

ஒடிசா மாநிலத்தின் சண்டிப்பூரில் நடத்தப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை சோதனை நடமாடும்; லோஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும் திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகாமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடர் சாதனங்கள் போன்றவற்றினால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த பெப்ரவரி 21-ம் திகதி நடத்தப்பட்டிருந்தது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers