சவூதிஅரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக தற்போதுள்ள சவூதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கி; ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சவூதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபரான லுப்னா அல் ஒலயன் ( Lubna Al Olayan ) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய வங்கி 17.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடன் சவூதிஅரேபியாவின் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.
பழமைவாதத்தை காலங்காலமாக கடைபிடித்துவரும் சவூதி அரேபியா, தற்போது பெண்களுக்கான உரிமைகளை சமூகத்தின் பல நிலைகளில் வழங்கி வருகின்றது.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் அங்கு முதல் முறையாக பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் வேறு பல சலுகைகளையும் வழங்கியருந்த நிலையில் தற்போது வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வரும் ஒலயன் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை பயின்றுள்ளதுடன் போர்ப்ஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment