கரீபியன் கடற்பகுதியில் உள்ள கெயிட்டி நாட்டில் வடமேற்கில் இன்று 5.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதில் குறைந்தது 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு கடலோரத்தின் வடமேற்கே 12 மைல்கள் தொலைவில் 7.3 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ள இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட் ஒப் பிரின்ஸ் வரை உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதுடன் வீடுகள் மற்றும் தேவாலயம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் இதில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்து உள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment