இலங்கை பிரதான செய்திகள்

வனவள திணைக்களம், மீள்குடியேற்றத்தை தடுத்துவரும் பகுதிகளுக்கு, வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு கள விஐயம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு குறித்த கிராமங்களுக்கு செல்லவுள்ளது. அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் மாகாணசபை உறுப்பினர்கள் குழு 17ம் திகதி குறித்த கிராமங்களுக்கு செல்லவுள்ளது.

இது குறித்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அமர்வின் போது சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜீ.ரீ.லிங்கநாதன் வவுனியாவில் வனலாகாவினரின் அடாவடிகள் தொடர்பில் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் சபை விசேட கவனமெடுத்து கள விஐயமொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து கால நேரத்தை பின்னர் அறிவிப்பதாக அன்றையதினமே நான் சபையில் கூறியிருந்தேன்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்திற்குச் செல்வதற்கும் அங்கு மக்கள் மீள் குடியமர்வதற்கும் வன இலாகாவினர் தடையேற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுருந்தது. ஆகவே அந்தப் பகுதிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கள விஐயமொன்றை மேற்கொண்டு உண்மை நிலையை உரிய நடவடிக்கையை முன்னெடுக்கும் வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி மாகாண சபையின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு சென்று நிலைமைகளைக் பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தொடர் நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம்.

இதேவேளை தமிழர் பிரதேசங்களில் உள்ள எல்லாம் காடுகளும் தமக்கும் தான் சொந்தம் என்ற அடிப்படையில் சகல காணிகளையும் வன இலாகாவினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர். ஆகவே தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மாகாண சபைக்கு இருக்கிறது. அந்த கடமையை நிறைவேற்றுதற்காகவே கள விஐயத்தை மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.