உலகம் பிரதான செய்திகள்

நிக்கி ஹாலே பதவி விலகியுள்ளார்


ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக நிக்கி ஹாலே கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

ஓபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்த காலக்கட்டத்தில் தெற்கு கரோலினா மாநிலத்தின் 116-வது ஆளுனராகவும் நிக்கி ஹாலே பதவி வகித்துள்ளார். இந்தநிலையில் இன்று அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அவரது பதவிவிலகல் தொடர்பான முழுமையான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் நிக்கி ஹாலேவின் பதவிவிலகலை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Outgoing U.S. Ambassador to the United Nations Nikki Haley talks with U.S. President Donald Trump in the Oval Office of the White House after the president accepted Haley’s resignation in Washington, U.S., October 9, 2018. REUTERS/Jonathan Ernst – RC1DB0144870

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.