பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை – இங்கிலாந்துக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்


இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்றையதினம் ஆரம்பமாகின்றது. தம்புள்ளையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவுப் போட்டியாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் இங்கிலாந்தை, அண்மைய காலங்களில் தொடர்ச்சியாகத் தடுமாறும் இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. எனினும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளுக்கான கடினமான இடமொன்றாக இலங்கை காணப்படுகின்ற வகையில் இலங்கைக்கு அது சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த தொடரின் எந்த முடிவும் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாம் இடத்திலிருக்கும் இலங்கையைப் பாதிக்காதென்ற நிலையில், இங்கிலாந்து 5-0 அல்லது 4-1 என தொடரை இழந்தால் இரண்டாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers