இலங்கை பிரதான செய்திகள்

துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது…

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் நால்வரினால் தமது தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் பிரியசத் டெப், புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் நலிண் பெரேரா ஆகிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் இன்று (11.10.18) ஒருமனதாக மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பபை வழங்கியுள்ளனர்.

அதன்படி இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த துமிந்த சில்வாவின் பாதுகாவலராக இருந்த அநுர துஷார டி மெல் என்பவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்ய நீதியரசர்கள் உத்தரவிட்டனர். ஏனைய பிரதிவாதிகளான துமிந்த சில்வா, சமிந்த ரவி ஜயநாத் மற்றும் சரத் பண்டார ஆகியோரின் மேன்முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நிராகரிக்க தீர்மானித்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers