Home பிரதான செய்திகள் நீல் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

நீல் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

by admin
Test Match Day 4, Malahide Cricket Club, Dublin 14/5/2018
Ireland vs Pakistan
Ireland’s Niall O’Brien during the warm up
Mandatory Credit ©INPHO/Oisin Keniry

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான நீல் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். அயர்லாந்து அணியின் விக்கட் காப்பாளராகவும் துடுப்பாட்ட வீரராகவும் செயல்பட்டு வந்த 36 வயதுடைய நீல் ஓ பிரையன், 134 சர்வதேச போட்டிகளில் பங்குபற்றியுள்ளதுடன் இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாகியிருந்தார்.

கடந்த 2002ம் ஆண்டில் இருந்து அயர்லாந்து அணிக்காக விளையாடி வரும் ஓ பிரையன் இதுவரை அயர்லாந்து அணிக்காக மொத்தம் 216 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.இவர் தனது சகோதரர் கெவின் ஓ பிரையனுடன் இணைந்து பல போட்டிகளில் அயர்லாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.

அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த இவர் முதல்தர போட்டிகளில் 9,057 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான அயர்லாந்து அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வந்த ஓ பிரையன் திடீரென இன்று இவ்வாறு ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More