இலங்கை பிரதான செய்திகள்

கருவியில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்

 

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியன் காடுச் சந்தியில் அமைந்துள்ள கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தில் 14.10.2018 இல் அந் நிகழ்வு நடைபெற்றது. கருவியின் தலைவர் திரு. க.தர்மசேகரம் அவர்களின் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு தீவக லயன்ஸ் கழகம் அனுசரணை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் தீவக லயனஸ்; கழகத்தின் பொருளாளரும், ஓய்வு பெற்ற கல்வித்திணைக்களப் பொறியியலாளருமான திரு பு.சிவபாலன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தீவக லயன்ஸ் கழக உறுப்பினர்கள், கருவியின் நிர்வாக சபையினர், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர்;; கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தீவ லயன்ஸ் கழகத்தினரால் வெள்ளைப் பிரம்புகள், மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் ஆகியன கருவி அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்தி சுயமாக நடமாடும் பயிற்சிப் பட்டறை ஒன்று நடைபெற்றது. கருவி நிறுவனத்தின் செயலாளர் திரு.து.யசிந்தன் அவர்களும் நிர்வாக சபை அங்கத்தவர் திரு.இ.கந்தராசா அவர்களும் இணைந்து பயிற்சி நெறியினை வழங்கியிருந்தனர்.
வலுவிழப்புடன் கூடிய நபர்களின் ஓர் சமூகப் பணி நிறுவனமான கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தில் பார்வை, கேட்டல், பேச்சு போன்ற புலன்சார் குறைபாடுடையவர்களும் கை, கால் பாதிப்புற்ற உடலங்க குறைபாடுடையவர்களும் மனநலிவு, தற்சிந்தனை போன்ற உளசார் குறைபாடுடையோரும் மற்றும் முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோரும் அங்கத்தவர்களாக உள்ளனர். இவர்களின் கல்வி, கலை, கலாசார, வாழ்வாதார, தொழில் மேம்பாடடிற்கான முன்னெடுப்புக்களையும் இவர்களின் குடும்ப நலன் தொடர்பான விடயங்களையும் முன்னிலைப்படுத்தியதாய் கருவியின் பணிகள் அமைகின்றன. அத்துடன் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான செயற்றிட்டங்களினையும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களது  பணிகள் அன்பர்கள், சமூகசேவை ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் சமூகப் பணிக்கு உதவ விரும்புகின்ற அன்பர்கள் karuvi.org@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொ.பே.இல.0094 21 – 205 4224 தொடர்பு கொண்டு விபரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.