பிரதான செய்திகள் விளையாட்டு

ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் சாதனை


ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி யில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத் துல்லா ஷஜாய் சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தற்போது ஏபிஎல் என்ற பெயரில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை ஷார்ஜாவில் நடத்தி வருகிறது.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் காபுல் வனான், பால்க் லெஜன்ட் அணிகள் போட்டியிட்ட நிலையில் காபூல் வனான் அணிக்காக களமிறங்கிய 20 வயது வீரர் ஹஸ்ரத்துல்லா 12 பந்துகளில் அரை சதமடித்துள்ளார்.  பால்க் லெஜன்ட்ஸ் அணி வீரர் அப்துல்லா மஜாரி வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

அந்தவகையில் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை இதுவரை அடித்துள்ள சர் கேர்பீல்ட் சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்ஷெல் கிப்ஸ், யுவராஜ் சிங் ஆகியோருடன் ஹஸ்ரத்துல்லாவும் தற்போது இணைந்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.