சினிமா பிரதான செய்திகள்

தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திரையில் என்றுமே போட்டி தொடரும், வடசென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள் என நடிகர் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் வடசென்னை. இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்டோர்  இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில்  நடிகர் சிம்பு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில், அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers