உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த நபருக்கு இன்று மரணதண்டனை தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது 9 சிறுமிகளை வன்புண்வுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் 30 வயதான இம்ரான் அலி அவர்களில் 7 வயது சிறுமியை வன்புணர்வின் பின் கொலை செய்து உடலை குப்பையில் வீசியிருந்தார் இது தொடர்பில் குறித்த நபரை கைது செய்த காவல்துறையினர் ;லாகூர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதித்ததுடன் 3 ஆயுள் தண்டனை மற்றும் 23 ஆண்டு சிறைத தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்தநிலையில் லாகூரில் உள்ள காட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இம்ரான் அலி இன்று காலை மாஜிஸ்திரேட் அடில் சர்வார் முன்நிலையில் தூக்கிலிடப்பட்டுள்ளார். அப்போது கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தையும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap