பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி


பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. மழை காரணமாக போட்டி 21 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயசெய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்தது.  இதையடுத்து, 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஆதில் ரஷித்துக்கு வழங்கப்பட்டது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருந்தது. 2-வது போட்டியினை மழை காரணமாக டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தநிலையில் இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.