பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி – நியூசிலாந்து 45 ஓட்டங்களால் வெற்றி :

இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இன்றையதினம் நியூசிலாந்து மவுண்ட் மௌன்கனை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதனையடுத்து 372 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் ; சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்ட நிலையில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.