இந்தியா பிரதான செய்திகள்

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவி விலகியுள்ளார்.


டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சிரேஸ்ட தலைவர் அஜய் மக்கான் இன்று பதவி விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், மாநிலப் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ஆகியோரை நேற்று மாலை சந்தித்துப் பேசிய அவர் இன்று காலை தனது பதவிலகல் முடிவை அறிவித்துள்ளார். தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பதவிவிலகுவதாக மக்கான் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திடீரென அஜய் மக்கான் காங்கிரஸ் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகி இருப்பது சந்தேகத்தை எழுப்பினாலும், அவருக்குத் தேர்தல் தொடர்பான முக்கியப் பொறுப்புகளை வழங்குவதற்காக காங்கிரஸ் தலைமை அவரை பதவிவிலகுமாறு கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்ற அஜய் மக்கான் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும், கட்சியில் முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

இதேவேளை ஆம் ஆத்மி கட்சியுடன் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதை வெளிப்படையாக் அஜய் மக்கான் எதிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers