உலகம் பிரதான செய்திகள்

நைஜீரியாவில் ஹெலிகொப்டர் விபத்து -5 பேர் பலி


நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் திடீரென தரையில் விழுந்து நொருங்கிய விபத்தில் விமானி உள்பட 5 பேர் உயிரிழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

போகோஹரம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினருக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-35எம் ரக ஹெலிகொப்டரே இவ்வாறு விழுந்து நொருங்கியுள்ளது

இதில் ஹெலிகொப்டரில் பயணித்த விமானி உட்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap