இலங்கை பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியும் பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள பொதுஜன முன்னணி தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற , செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பரந்தளவிலான கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்த அர் சரியான நேரத்தில் வேட்பாளர் யாரென அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியை வலுப்படுத்தி வருவதாகவும் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு அதனால் தடையேதும் ஏற்பட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களுடன், சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஸ, சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்வார்கள் என தான் நம்பவில்லை எனவும் பதில் அளித்துள்ளார்.

அத்துடன் ஐதேகவுடன் இணைந்தால், ஐதேகவுக்குள் ஏற்கனவே உள்ள உட்கட்சி பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் எனவு ம் சந்திரிகா குமாரதுங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப் போவதில்லை எனவும் மகிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.