பிரதான செய்திகள் விளையாட்டு

எனது வெற்றிக்கு பயிற்சியாளரே முக்கிய காரணம்


நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹார்ட்தான் முக்கிய காரணம் என புஜாரா தெரிவித்துள்ளார்.  அவுஸ்ரேலியா – இந்தியா இடையோன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்திய டெஸ்ட் அணியின்  முக்கிய துடுப்பாட்ட வீரரான   புஜாரா  நன்றாக விளையாடவில்லை என்ற விமர்சனம் ஏற்பட்டது.

ஆனால் இந்த தொடரில் தனது திறமையால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 7 இன்னிங்சில் மூன்று சதங்கள், ஒரு அரைசதம்  அடித்துள்ள அவர்  மூன்று முறை 300 பந்துகளுக்கு மேல் சந்தித்து அவுஸ்ரேலிய  பந்து வீச்சாளர்களை வெறுப்படையச் செய்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட பிசியோதான் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். பேட்ரிக் பர்ஹார்ட் குறித்து புஜாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்த மனிதர் அவரது குடும்பத்தை விட கடந்த மாதம் என்னுடன்தான் அதிக நாள் செலவிட்டுள்ளார். உங்களுடைய எல்லா உதவிகளுக்கும் நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers